அல்லு தெறிக்க விடும் நடவடிக்கை - அரசு அதிகாரிகளை கலங்கவிட்ட கன்னியாகுமரி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


முறைகேடு நடவடிக்கையில் ஈடுபட்ட பேரூராட்சி செயல்அலுவலரே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம், பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் மணி. இதே அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் அகமதுமீரா உம்மாள்.

இருவரும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இந்நிலையில் பேரூராட்சிகளின் தணிக்கை அலுவலர் வேல்முருகன், பூதப்பாண்டி பேரூராட்சியில் கணக்குகளை தணிக்கை செய்தபோது, பொதுமக்களின் கட்டட வரைபடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கான கட்டண டி.டி., அரசிடம் ஒப்படைக்காமல் முறைகேடு செய்திருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வேல்முருகன் உயர் அதிகாரிகளிடம் அளித்த புகாரின் பேரில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன், கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரன், செண்பகவள்ளி ஆகியோர் பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர்.

இதில்செயல்அலுவலர் மற்றும் இளநிலைஉதவியாளர் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து செயல்அலுவலர் மணி மற்றும் இளநிலை உதவியாளர் அகமதுமீரா உம்மாள் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, உதவி இயக்குநர் கண்ணன் உத்தரவிட்டார்.

இதையடுத்து அழகப்பபுரம் பேரூராட்சி செயல் அலுவலர்அம்புரோஸ், பூதப்பாண்டி செயல்அலுவலராக பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

English Summary

govt employees punished by higher officials


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal