தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எங்கெங்கு அனுமதி? தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றுடன் 4வது கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில் அறிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுடன் நீட்டிப்பு. வழிபாட்டு தலங்களுக்கான தடை தொடரும். அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் முக்கிய தளர்வுகள் :

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவங்களில் தனிமனித இடைவெளியோடு அமர்ந்து உணவு உண்ண  தமிழக அரசு அனுமதி.

டீ கடைகளில் அமர்ந்து டீ அருந்தவும் தமிழக அரசு அனுமதி.

குளிர்சாதன வசதி பயன்படுத்தாமல் முடித்திருத்தங்கள் இயங்கவும் தமிழக அரசு அனுமதி அளித்தும் உத்தரவு.

மண்டலங்களுக்குள்இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்யலாம்.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை.

ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது.

கொரோனா பணியில் உள்ளவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு.

நாளை முதல் சென்னை காவல் எல்லை நீங்கலாக பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடக்கம்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.

50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும்.

ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி?

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்லில் அனுமதி.

தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி அனுமதி.

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி அனுமதி.

நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை அனுமதி.

திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனுமதி.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி அனுமதி. 

காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு  அனுமதி.
 
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt and private buses in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->