விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கும் தமிழக அரசு ! - Seithipunal
Seithipunal


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விவசாய நிலம் வாங்க 50 சதவீதம் அல்லது ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது !

இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொருளாதார முன்னேற்றமே இல்லாத விளிம்பு நிலை மக்களான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு உதவிடும் வகையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மானிய கோரிக்கை விவாதத்தின் போது அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பில் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதார நிலை மேம்படும் வகையில் விவசாய நிலம் வாங்க நிலத்தின் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வழங்கப்படும்.  இத்திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் 200 நிலம்மற்ற விவசாய தொழிலாளர்கள் பயன்படுவார்கள் என அறிவித்திருந்தார்.

அந்த அந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் நடப்பு நிதியாண்டில் ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியின விவசாயிகள் மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 90% மானியத்துடன் மின் இணைப்பு வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு சுமார் 23 கோடியே 37 லட்சம் செலவாகும்.

இத்திட்டத்தின் கீழ் சுமார் 900 ஆதிதிராவிட விவசாயிகளும் 100 பழங்குடியின விவசாயிகளும் 90% மானியத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government of Tamil Nadu will provide subsidy for purchase of agricultural land


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->