தமிழகத்தை திண்டாடவைத்த வேலை நிறுத்தம், சற்றுமுன் வெளியான அரசு மருத்துவர்களின் புதிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு மருத்துவர்கள், மத்திய அரசுக்கு இணையாக தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்பதை போன்ற பல கோரிக்கைகளை முன்னிறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு (JACGDA)  மூலமாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.                                                                      

ஆனால் இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதநிலையில், ‘டிசம்பர்  4-ம் தேதி புறநோயாளிகளுக்கான சிகிச்சை முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் நோயாளிகள் முறையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமல் பெரும் அவதிக்கு ஆளானர்.

இதையடுத்து, மதுரையைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா என்பவர் அரசு மருத்துவர்களின் தொடர் 3 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை இதனை அவசர வழக்காக ஏற்று நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

          

அதனை தொடர்ந்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் கோரிக்கைகள் குறித்து மருத்துவக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். 

பின்னர் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்,இருதரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதிகள்  அரசு தரப்பில் ஒரு நபர் வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அறிக்கை வெளியானவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  நீதிமன்றக் கோரிக்கைகளை ஏற்ற மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி  வைப்பதாக கூறியுள்ளனர்.

 பின்னர் விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் மருத்துவர்களின் கோரிக்கைகளை தீர்க்க அரசு மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை என்ன?ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை எப்போது கிடைக்கும், ஊதிய உயர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என சுகாதாரத்துறையிடம் பலக் கேள்விகளை எழுப்பியுள்ளனர். 

மேலும் இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 17ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
.
 

English Summary

government doctors vabused their strike


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal