தமிழகத்தில் தோண்ட தோண்ட வந்த தங்க புதையல்.. கோவில் பின்புறத்தில் கிடைத்த பழங்கால நாணயங்கள்.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் பிரபலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமாக விளங்குகிறது. 

இந்த கோவிலில் பிரசன்ன விநாயகர் சன்னதிக்கு பின்புறம் உள்ள தோட்டத்தை கோவில் ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளனர். அப்போது அங்கு ஒரு குழி தோன்றியுள்ளனர். அப்போது குழி தோண்டும்போது எதோ தட்டுப்பட்டு உள்ளது. 

வித்தியாசமான சத்தம் கேட்டதால், அங்கு உள்ள மண்ணை அள்ளிப் பார்த்தபோது ஒரு செம்பு பாத்திரம் ஒன்று கிடந்துள்ளது. அதில் 3.8 கிராம் எடை அளவுக்கு 504 தங்க நாணயம், 10 கிராம் எடை அளவுக்கு ஒரு தங்க நாணயம் என மொத்தம் 505 தங்க நாணயங்கள் கிடைத்துள்ளது. நாணயத்தின் தற்போதைய மதிப்பு 60 இலட்சம் ஆகும். 

அனைத்தும் பழங்காலத்து நாணயங்கள் என்பதால், அதன் மதிப்பை தொல்லியல் துறையினர் கணக்கிட வேண்டும். இதனால் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் முன்னிலையில் திருச்சி மாவட்ட வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

golden treasure jambukeswarar temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->