திருவண்ணாமலை தீபத்தில் தங்கம்.! யாருக்கு தெரியுமா.? உற்சாகமான அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருவண்ணாமலையில் நடக்கவிருக்கும் கார்த்திகை மகா தீபம் திருவிழாவிற்கு துணிப்பை மற்றும் சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டுவருவதை ஊக்குவிக்கும் விதமாக பரிசு ஒன்றை அறிவித்து இருக்கின்றது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளை பக்தர்கள் கொண்டு வரும் பொழுது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. மேலும், அதனை அப்புறப்படுத்துவதும் மிகவும் சவாலான பணியாக இருக்கின்றது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமானது தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கும் திட்டத்தை அறிவித்து இருக்கின்றது.

இதில் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு 12 பேருக்கு இரண்டு கிராம் தங்க நாணயங்களும், 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GOLD IN THIRUVANNAMALAI DEEPAM


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->