இனி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் ஐஸ்கிரீம் - Seithipunal
Seithipunal


 

குழந்தைகளின் விருப்பமான உணவு பட்டியலில் முதலிடம் பிடிப்பது ஐஸ்கிரீம்.இந்த ஐஸ்கிரீமை சுலபமாக வீட்டிலேசெய்வது எப்படி என்று பாக்கலாம்  குலாப் ஜாமூன் ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள் :

பால் 1 கப்
விப்பிங் க்ரீம் 1 கப்
சர்க்கரை 5 டேபிள் ஸ்புபூன்
வெண்ணிலா எசன்ஸ் 1/2 டீஸ்பூன்
குலாப் ஜாமூன் 10

                                              
செய்முறை :

குலாப் ஜாமூன் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ், க்ரீம் ஆகியவற்றை சேர்த்து கரையும் வரை கலக்கவும்.

பிறகு அதனை ஃப்ரீசரில் ஒரு டப்பாவில் ஊற்றி வைக்கவும். ஃப்ரீசரில் வைத்த கலவையை 1 மணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் அரைக்கவும். மறுபடியும் டப்பாவில் ஊற்றி, 1 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.

 இதே போல் ஒரு மணி நேர இடை வெளியில் 5 முறை அரைத்து வைத்தால் வழுவழுப்பான ஐஸ்கிரீம் கிடைக்கும். குலாப் ஜாமூனை ஒன்றிரண்டாக மசிக்கவும். ஐஸ்கிரீம் கலவையை கடைசி முறை அரைத்தவுடன் மசித்த குலாப் ஜாமூனை அதில் கலந்து விடவும். கலவையை கலக்கி மறுபடியும் ஃப்ரீசரில் வைக்கவும். சுவையான குலாப் ஜாமூன் ஐஸ்கிரீம் ரெடி.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

globe jamun ice cream preparation method


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->