பட்டப்பகலில் சாக்லேட் கொடுத்து, குழந்தையிடம் பெண் செய்த காரியம்.! பெரும் அச்சத்தில் ஊர் மக்கள்!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் அஸ்தம்பட்டி என்ற பகுதியில் தெருவில் குழந்தை  விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்பொழுது அங்கு வந்த பெண் ஒருவர் அந்த குழந்தையிடம் சாக்லேட் கொடுத்து மிகவும் அன்பாக பேசியுள்ளார். பின்னர் அந்த குழந்தையுடன் விளையாடி கொண்டே  கடைக்கு செல்லலாமா என கேட்டுள்ளார்.

இந்நிலையில் இதனை கண்ட அப்பகுதியில் உள்ள சிலர் நீங்கள் யார்? இந்த குழந்தைக்கு எதற்காக சாக்லேட் கொடுத்தீங்க என்று பல கேள்விகளை தொடர்ச்சியாக முன்வைத்துள்ளனர். இந்நிலையில் செய்வதறியாது அந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மீது சந்தேகம் அடைந்த மக்கள் அப்பெண்ணை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்நிலையில்  போலீசார் அந்த பெண்ணிடம்   தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த பெண் இதற்கு முன்பு ஏற்கனவே சாக்லேட் கொடுத்து பகலில் இரண்டு குழந்தைகளை கடத்தியுள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையிடம் சாக்லேட் கொடுத்து குழந்தையை கடத்த முயற்சி செய்த அந்தப் பெண்ணால் கிராமத்தில் சிறிது நேரம் பெரும் பாராபரப்பு ஏற்படுத்தியுள்ளது மேலும் அப்பகுதியில் பெற்றோர்கள் யாவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

English Summary

girl try to kidnap baby


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal