காலை கடத்தப்பட்டு., மாலை வீடு வந்த குழந்தை.! வாட்சாப்ப்பால்., வசமாக சிக்கிய கடத்தல்காரர்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் பகுதியில் ஒரு குழந்தை காலையில் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு, வாட்ஸ்அப்பில் பறந்த ஃபார்வர்டு மெசேஜ்ஜால் உடனடியாக மாலையே மீட்கப்பட்டது போலீசாரை ஆச்சரியத்திற்கு ஆளாகியுள்ளது. 

திருப்பூர் பகுதியைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவருக்கு ஜாவித் அகமது என்ற 4 வயது குழந்தை இருந்துள்ளான். நேற்று வீட்டிற்கு வெளியே அகமது விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென காணாமல் போயிருக்கின்றன். அக்கம் பக்கம் என்று பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

மேலும் தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக வாட்ஸ் அப்பில் தன்னுடைய மகனின் புகைப்படத்தை பகிர்ந்து மகனை காணவில்லை எங்காவது கண்டால் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று காஜாமைதீன் தன்னுடைய செல்போன் எண்ணையும் பகிர்ந்திருந்தார். திருப்பூர் முழுவதும் இந்த செய்தியானது காட்டுத்தீ போல பரவியது. வேகமாக ஒவ்வொருவரும் பகிர்ந்ததுடன் குழந்தையை தேடவும், முயன்றனர். 

சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி இந்த செய்தியால் குழந்தையை வேறு எங்கும் அழைத்துச் செல்ல முடியாமல் கடத்தல்காரர்கள் அச்சமடைந்து காவல் நிலையம் அருகே குழந்தையை இறக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன 4 வயது குழந்தை சமூக வலைத்தளத்தினால் மாலையே கண்டறியப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl kidnap and found till per a day in trippur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->