டெங்குவால் பலியான இளம்பெண்., சென்னையில் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக தமிழகத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகிறது. அதில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே வருகிறது.

இதை தொடர்ந்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியது முதல் பலமாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இதனால் சாலைகளிலும், பள்ளமாக இருக்கும் இடங்களிலும் நீர் தேங்கிதன் காரணமாக கொசுக்களின்  உற்பத்தி அதிகரித்து இருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள டெங்கு காய்ச்சலுக்கு வேலூர், சென்னை உள்ளிட்ட  பல  மாவட்டங்களில் உயிரிழப்புக்கள் நேர்ந்திருக்கிறது.

இதை தொடர்ந்து, டெங்குகாய்ச்சலைத் தடுப்பதற்குத் தமிழக அரசும், மாநகராட்சியும் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் உயிரிழப்புகளைத் தடுக்க இயலவில்லை.

இந்த நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தை சேர்ந்த லாவண்யா என்னும் இளம்பெண் டெங்கு காய்ச்சலால் பலியாகியுள்ளார்.  இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பயத்தில் இருக்கிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl dead for dengue fever


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->