பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் உயர்வுக்கான விருது..! இந்த இரண்டு மாவட்டங்களுக்கு தான்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்விகளுக்காக மத்திய அரசு பல திட்டத்தை சிறப்பாக கொண்டு வந்தது. அந்த திட்டத்தை சிறப்பாக செய்யலாற்றியதற்கான விருது தமிழகத்தில் நாமக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது.

மத்திய அரசின் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை பாராட்டும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்ம்ருத்தி இரானி கலந்துக்கொண்டார். இதில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் சிறந்து விளங்கியதற்கான விருது தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. அதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் பெற்றுக் கொண்டார்.

மேலும் இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட விருதை அந்த மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி பெற்றுக்கொண்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl baby born high in those district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->