நடுரோட்டில் போதையில் அத்துமீறிய அக்கா கணவன்.! வெளுத்து வாங்கிய மைத்துனி.!  - Seithipunal
Seithipunal


குடித்துவிட்டு வந்து அடிக்கடி தன்னுடைய அக்காவை அடித்துத் துன்புறுத்தி வந்த அக்காவின் கணவரை ஒரு பெண் நடுரோட்டில் வெளுத்து வாங்கும் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதிகள் சிவா என்பவருக்கு இந்து என்ற மனைவி இருக்கின்றார். இருவருக்கும் திருமணமாகி 15 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. சிவா குடிக்கு அடிமையாகி அடிக்கடி தன்னுடைய மனைவி இந்துவை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். 

இதுபோலவே, சில நாட்களுக்கு முன்பு சிவா சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இந்துவுடன் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்து,  இந்துவை அடிக்க ஆரம்பித்து இருக்கின்றார். அப்போது உடனிருந்த இந்துவின் தங்கை சங்கீதா அக்காவை அடிப்பதை பார்த்து ஆத்திரம் கொண்டுள்ளார். 

பின்னர், ஆத்திரம் தாங்காமல் நடுரோட்டில் அக்கா கணவர் என்றும் பார்க்காமல் சிவாவை உருட்டு கட்டையால் அடித்து, வெளுத்து இருக்கின்றார். இதற்கான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றது. இது சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து காவல் துறையினர் விசாரணையில், 15 வருடங்களாக அந்த குடும்பம் இதே பகுதியில் குடியிருப்பதாகவும், இதுபோன்று பலமுறை அடிதடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GIRL ATTACKING SISITERS HUSBAND


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->