நாடக காதல் புள்ளிங்கோஸ் புது ரூட்டு... பெண்களே, பெண் பிள்ளைகளின் பெற்றோர்களே உஷார்..!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூரை அடுத்துள்ள பவுச்சூர் பகுதியை சார்ந்தவர் விஜயன். இவரது மகள் விமலா (வயது 20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செங்கல்பட்டில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி விலங்கியல் இறுதி வருடம் பயின்று வருகிறார். 

கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக விமலாவிற்கு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பகுதியை சார்ந்த நந்தகோபால் (வயது 30) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர்களின் நட்பானது காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து நந்தகோபால், விமலாவிடம் திருமணம் செய்வதாக கூறி ஆசையாக பேசி, அவ்வப்போது பணம் வாங்கியுள்ளான். 

இவ்வாறாக சுமார் ரூ.2 இலட்சம் வரை பறித்த நிலையில், மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மீண்டும் விமலாவின் அலைபேசிக்கு தொடர்பு கொண்ட நந்தகோபால், அவசரமாக ரூ.20 ஆயிரம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று விமலா கூறிய நிலையில், நந்தகோபால் தான் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன பெண்மணி விஷயத்தை தாய் மற்றும் தந்தையிடம் தெரியப்படுத்தியுள்ளார். 

இதனையடுத்து இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து செஞ்சியில் இருந்த நந்தகோபாலை கைது செய்தனர். மேலும், அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், அவனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 7 வயதுடைய மகன் இருக்கும் நிலையில், கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பணம் பறித்ததை ஒப்புக்கொண்டுள்ளான். இதன்பின்னர் நந்தகோபாலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் என இளம்பெண்களை காதலிப்பதாகவும், ஒருதலையாக காதலிக்கிறேன் என்றும் பல கொடூர கொலைகள் மற்றும் பணம்பறிப்பு சம்பவங்கள் நாடக காதல் கோஷ்டிகளால் அரங்கேறியுள்ள நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இது போன்று பெண் பிள்ளைகளை ஏமாற்றி, அடுத்தவரின் வயிறெரிச்சலில் பிழைப்பை நடத்தி வரும் கும்பல்கள் சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் ஒடுக்கப்படாத பட்சத்தில், பெண் பிள்ளைகளை பெற்றோர் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கனபொழுது ஆகாது என்றும், சட்டம் தன் கடமையை பெண்கள் விஷயத்தில் பாரபட்சமின்றி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gingee man cheat girl by Drama Love Police Arrest Culprit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->