சிலிண்டர் வாங்க தேவையில்லை, இனி வீடுகளுக்கே நேராக எரிவாயு விநியோகம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முதன் முறையாக குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்திற்க்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகிக்க திட்டமிடப்படப்பட்டுள்ளது. 

அதன்படி, சேலம் கே.ஆர் தோப்பூரில் உள்ள  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான சமையல் எரிவாயு சேமிப்புக்கிடங்கிலிருந்து சமையல் எரிவாயுவை குழாய்கள் மூலமாக எடுத்துவந்து, ஐந்து ரோடு பகுதியில் அமையவுள்ள பங்கில் சேமிக்கப்படவுள்ளது.

அந்த பங்கிலிருந்து குழாய் மூலமாக சேலம் மாநகரம், இரும்பாலை குடியிருப்புகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்ய, முதல்கட்டமாக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தப்பணிகள் முடிவடைய இன்னும் ஓராண்டு ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gas straightly to house new plan in salem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->