பாதுகாக்கப்படுமா கங்கை கொண்ட சோழபுரம் கோயில்? வருகிறது நான்கு வழி சாலை! உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு!   - Seithipunal
Seithipunal


திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திருச்சி சிதம்பரம் நெடுஞ்சாலை ஆனது, சோழர்களின் தலைநகரமாக விளங்கிய கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தின் மிக அருகிலேயே செல்கிறது. 

தற்பொழுது இருவழி சாலையாக இந்த சாலை இயங்கி கொண்டிருக்கிறது. இந்த சாலை திருச்சி முதல் சிதம்பரம் வரை தரம் உயர்த்துவதற்காக சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் அருகே நான்கு வழி சாலை அமைப்பதை எதிர்த்து கோமகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 3 வாரத்திற்குள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோயிலின் மிக அருகே சாலை செல்வதால், சாலை விரிவாக்கத்தின் போது கோயிலை சுற்றி உள்ள இடங்கள் அரசு கையகப்படுத்தலாம், மேலும் சாலையின் ஓரங்களில் உயரமான கட்டிடங்கள் எழலாம், நான்கு வழி சாலை என்பதால் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்லும் போது எதிர்காலத்தில் கோயிலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகலாம் என்பதால் எதிர்ப்பு உருவாகியுள்ளது. தமிழகத்தின் மிக முக்கியமான வரலாற்று சின்னமாக இருக்கும் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலினை பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமையாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gangai konda cholapuram temple near 4 way road


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->