சூதாட்டத்துக்கு கருத்து கூட்டம் நடத்தும் ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான் - இ.பி.எஸ் பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல்லில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் நேற்று இரவு, சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:- 

தி.மு.க. அரசின், புதுமைப்பெண் திட்டத்தை வரவேற்பதன் மூலம் ஏற்கனவே தி.மு.க.வுடன் இருக்கும் நெருக்கத்தை ரவீந்திரநாத் உறுதிப்படுத்தியுள்ளார். அதி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார். விசாரணைக்கு பின்னர் தெரியும். இப்போது அதுபற்றி கருத்து கூற முடியாது. 

ஒவ்வொரு கட்சிக்கும் இலவசங்கள் தொடர்பாக ஒரு நிலைப்பாடு இருக்கிறது. பிரதமர் மோடி இலவசம் தவறு என்று கூறுவது அந்த கட்சியின் நிலைப்பாடு. ஆனால் எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் சரி, ஜெயலலிதா ஆட்சியிலும் சரி எண்ணற்ற இலவச திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எதிர்காலத்திலும் மக்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்வோம். நான் ஆட்சியில் இருந்த போதும் போராடினேன். எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். 

தி.மு.க. அரசு  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தி.மு.க. மக்களுக்கு நன்மை கிடைக்கும் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் ஆகியவை தி.மு.க. ஆட்சியில் உயர்ந்துள்ளது. தி.மு.க. வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டது. 

அ.தி.மு.க. ஆட்சியில் தான், இந்தியாவிலேயே அதிக தார்ச்சாலைகள் உள்ள மாநிலம் தமிழகம் என்பதை உருவாக்கினோம். தி.மு.க. அரசு மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.1000, கல்விக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை, கியாஸ் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என எதையும் செய்யவில்லை. ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தொடர்பாக நாங்கள் சட்டமே நிறைவேற்றினோம். 

நாங்கள், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் ஆனால் முதலமைச்சர் அதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறார் சூதாட்டத்துக்கு கருத்து கூட்டம் நடத்தும் ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான் என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gambling opinion meeting Chief Minister to hold


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->