காவல்துறை கட்டுப்பாட்டில் வந்த சென்னை.. என்ன செய்யலாம்.? என்ன செய்யக்கூடாது.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதனால், சென்னையில் வரும் 19 ஆம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி காலை 12 மணிமுதல் சென்னையில் முழு ஊரடங்கு அமலாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு, அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், 30ஆம் தேதி வரை 12 நாட்கள் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு. சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும்.

ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும். பழைய இ-பாஸ் செல்லாது. வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர் கையுறை, கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.

மாவட்ட எல்லைகள் மற்றும் மாவட்ட பகுதிக்குள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்கள் பற்றாக்குறை இல்லை. 10 சதவீதம் காவலர்களை காத்திருப்பில் வைத்துள்ளோம். 18000 காவலர்களுக்கு பணி உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

full lock down in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->