தமிழகத்தில் இந்த பகுதிக்கு மட்டும் நாளை முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா வைரஸ் தற்போது குறைந்து இருந்தாலும் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகியுள்ளது. 

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்காமல் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் மற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் முழு ஊரடங்கிற்கு பிறகு கொரோனா குறைய தொடங்கியது. இருப்பினும் சென்னையில் கொரோனா வைரசால் தினம் தினம் ஆயிரத்து 1,500 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று முன் தினத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடிவடைந்தது. நேற்று சென்னையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது. ஆகையால் பொதுமக்கள் கூட்டம்கூட்டமாக கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தனர். கொரோனா வருவதற்கு முன்பு சென்னை எப்படி இருந்தது அதுபோல நேற்று காட்சியளித்தது. 

இந்நிலையில், தேனியில் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆண்டிபட்டியில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால் ஆண்டிப் பட்டிக்கு மட்டும் பத்து நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தாசில்தார் சந்திரசேகர் தலைமையில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் ஆண்டிப்பட்டியில் பத்து நாட்கள் முழு ஊரடங்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஆண்டிபட்டியில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

full lock down in andippatti


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->