முழு ஊரடங்கு நிறைவு.. நான்கு மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டித்து உள்ளனர். அத்துடன் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது. 

இந்நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாட்களாக மூடப்பட்டிருந்த கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் வங்கிகள் இன்று முதல் 50 சதவீத ஊழியர்கள் உடன், காலை 10 மணி முதல் 4 மணி வரை இயங்கும். மேலும் பொதுமக்கள் பரிவர்த்தனை மேற்கொள்ள வங்கிகள் அனுமதிக்கப்படுவார்கள். 

மதுரையில் மட்டும் முழு ஊரடங்கு 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் டாக்ஸி ஆட்டோக்கள் இயங்கும். சென்னையில்  இறைச்சி, மீன் கடைகளும் இன்று முதல் திறக்கப்படும். வர்த்தக நிறுவனங்கல் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ஹோட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்களுக்காக மட்டும் திறக்கப்படும்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தமிழகத்தில் 4 வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,151  ஆக உயர்ந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

full lock down complete in 4 districts


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->