அனைத்து கோவில்களிலும் போக் சான்றிதழ் கட்டாயம் - தமிழக உணவுப்பாதுகாப்புத்துறை.! - Seithipunal
Seithipunal


இந்து அறநிலையத்துறை மற்றும் தனியாருக்குச் சொந்தமான இந்து கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்திலும் மத்திய அரசின் போக் (BHOG) சான்றிதழ் கட்டாயம் பெறவேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்ததுள்ளது. 

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு (FSSAI) மற்றும் தர நிர்ணய அமைப்பின் கீழ் உணவு உற்பத்தி நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக, இந்து சமய அறநிலை துறை மற்றும் தனியார் வசம் உள்ள கோவில்களில் சுவாமிக்கு படைக்கும் பிரசாதங்கள் தயாரிக்கும் இடங்கள், அன்னதானக் கூடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து போக் (BHOG) சான்றிதழ் வழங்கப்படுகிறது. 

கடந்த வருடம் ஜனவரியில் நெல்லையப்பர் கோவில், பாபநாசம் கோவிலில் சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னையில் இருக்கும் வடபழனி முருகன் கோவில், திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், வடிவுடை அம்மன், கொடியிடை அம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் போக் சான்றிதழ் குறித்து பேச ஆலய நிர்வாகிகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, "உணவுக்கூடம், விடுதிகள், அரசு மற்றும் தனியார் கேன்டின்கள் போன்றவற்றில் சுத்தமாக உணவு தயாரிக்கும் முறை, சமையல் கூடம், சமையல் பொருட்கள், குடிநீர் பராமரிப்பு ஆகியவற்றை கண்காணித்து உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் அளித்து வருகிறது. இது போன்று, கோவில்களில் உள்ள தெய்வங்களுக்கு படைக்கப்படும் பிரசாதங்களும், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களும் சுத்தமாக உள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார். 

இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், "நூற்றுக்கணக்கான பக்தர்கள், முதியவர்கள், குழந்தைகள் வந்து செல்லும் கோவில்களில் சிறு விஷயங்களில் கூட அதிக அளவு கவனம் செலுத்த வேண்டும். பக்தர்களுக்கு வழங்கும் பிரசாதங்கள் செம்பு பாத்திரத்தில் தயார் செய்யவோ அல்லது விநியோகம் செய்யவோ கூடாது. இதனால் பிரசாத உணவு விஷமாக மாறும் அபாயம் உள்ளது. 

அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும். அரசு அனுமதி செய்யுள்ள விதிமுறைகளை பின்பற்றி போக் சான்றிதழ் பெற ஆலய நிர்வாகிகள் முன்வர வேண்டும். அரசின் உத்தரவுகளை மீறி அலட்சியமாக செயல்படுவது உறுதி செய்யப்படும் பட்சத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FSSAI Announce Temple Want BHOG Certificate in Tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->