மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி... தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்க பெரும்பாலும் செல்லவில்லை. இந்த சூழ்நிலைலேயே மீன்பிடித்தடைகாலமும் அமலில் இருந்தது. மேலும், அதிதீவிர அம்பன் புயலும் உருவானது.

இந்நிலையில், மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதியானது தற்போது வழங்கப்பட்டுள்ளது. தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்கு கடற்கரையில் ஆகஸ்ட் மாதம் முதல் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீன்பிடித்தடைக்காலம் தற்போது 61 நாட்களில் இருந்து  47 நாட்களாக குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. 

மேலும், மீனவர்கள் மீன்பிடிக்க விசைப்படகுகள் மட்டும் கடலுக்குள் செல்லலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு இது பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

From June 1 fishermen start work announce by tn govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->