ஜல்லிகட்டு காளை முதல் சண்டை சேவல் வரை சீதனமாக வழங்கிய அண்ணன்.. வைரல் புகைப்படங்கள்.!  - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சுரேஷ் - செல்வி தம்பதியினருக்கு ராயல் என்ற மகனும், விரேஷ்மா என்ற மகளும் உள்ளனர். இதில் தங்கை விரேஷ்மாவிற்கு நேற்று திருமணம் நடைபெற்றது. 

இதில், விரேஷ்மாவும் அவரது அண்ணன் ராயல் என்பவரும் சிறு வயது முதலே தங்களுடைய வீட்டில் ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய், சண்டை சேவல் போன்ற பல்வேறு செல்லப்பிராணிகளை பாசத்துடன் வீட்டில் வளர்த்து வந்துள்ளனர்.

இதில் அவருடைய தங்கை விரேஷ்மா அதிக நேரம் செல்லப்பிராணிகளுடன் தான் கழித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது தங்கையின் திருமணத்திற்கு சீதனமாக அவர் வளர்த்து வந்த செல்லப் பிராணிகளை அண்ணன் கொடுத்துள்ளார்.

திருமண மண்டபத்தில் ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா, கண்ணி நாய் சண்டை சேவல் ஆகியவற்றை திருமண மேடையில் ஏற்றி புகைப்படம் எடுத்துள்ளனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

From jallikattu bull to fighting cock, Annan gave it to sister marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->