பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை.. விழுப்புரத்தை தொடர்ந்து, 4 மாவட்டங்களிலும் அமல்.!! - Seithipunal
Seithipunal


காவல்துறைக்கு உதவி செய்யும் பொருட்டு இயங்கி வரும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்கள் குழு, தங்களின் அதிகாரத்தை மீறி காவல் துறை அதிகாரிகள் போல தங்களை பாவித்து அப்பாவி மக்களை அவ்வப்போது மிரட்டி வருவதாகவும் பல இடங்களில் குற்றசாட்டு எழுவதாக தெரியவருகிறது. 

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல் நிலையத்திற்கு இனி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர் குழுவினர் வர தடை விதிப்பதாக மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர் குழுவிற்கு பதிலாக ஊர்காவல்படையினர் மற்றும் முன்னாள் வீரர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவை மீறி போலீஸ் நண்பர்கள் குழுவினர் காவல்நிலையத்திற்கு அனுமதித்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காவல் பணியில் ஈடுபட தடை விதிக்கப்படுவதாக திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா தகவல் தெரிவித்துள்ளார். 

தற்போதுள்ள சூழ்நிலையில் பல பிரச்சனைகள் நடைபெற்று வருவதால் இந்த தடை தற்காலிகமாக விதிக்கப்படுவதாகவும், இந்த பிரச்சனை முடிந்தவுடன் அவர்களுக்கான பணிகள் வழங்கப்படும் என்றும் டி.ஐ.ஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Friends of police work temporary banned in Trichy Police Limit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->