காதல் ஜோடி செய்த காரியத்தால் கதறும் சிறுவர்கள் - இருவர் மருத்துவமனையில் அனுமதி..! பதற வைக்கும் பின்னணி..? - Seithipunal
Seithipunal


திருப்பூரில், விசார ணைக்கு அழைத்து சென்று ஊரக காவல்நிலையத்தில் வைத்து சிறுவர்களை கடுமையாக அடித்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர், நாச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர், திருப்பூரிலுள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.இவரது மகன் ஜெகநாதன்.

இவர், புதூர் பிரிவு பகுதியை அடுத்த எல்லோரா கார்டன் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் கடந்த 26ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெகநாதனின் நண்பர்களான சிறுவர்களை ஊரக காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று கடுமையாக அடித்துள்ளனர்.

இதனையடுத்து, வியாழனன்று சிறுவர்களுக்கு உடல் நலன் குன்றிய நிலையில் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ஜெகநாதனின் தந்தை பாலாஜி கூறிறுகையில், என் மகன் ஜெகநாதன் கடந்த 26ம் தேதி முதல் காணவில்லை.

இதுகுறித்து அவனது நண்பர்களிடம் கேட்டபோது, கடந்த பல மாதங்களாக புதூர்பிரிவு எல்லோர கார்டன் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும், இருவரும் கடந்த 26ம் தேதி வீட்டை விட்டு சென்றனர், தற்போது வரை எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என்றனர்.

புதனன்று இரவு எனது தம்பி வெங்கேட்சன் (45) மகனான பிராபாகர் (15) மற்றும் அவர்களது நண்பர்களான ஹரி (16), திவாகர் (20), சந்தோஷ் (21), அருன்குமார் (21) ஆகிய ஐந்து பேரையும் விசாரணை என்ற பெயரில் ஊரக காவலர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரும்படி கூறியுள்ளனர்.

இதனையடுத்து, சிறுவர்களை காவல் நிலையத்தில் அழைத்து சென்றோம். இதன் பின் இரவு 11 மணி வரை சிறுவர்களை மப்டியில் இருந்தவர்கள் காவல் துறையினர் எனக்கூறி சராமாரியாக அடித்தனர்.

இதனால், சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

friend get married police attacked


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal