சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியார் நினைவு தினம்..!! - Seithipunal
Seithipunal


சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான மறைந்த ராமசாமி படையாட்சியார் அவர்களின் 28 வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது 

1918ல் பிறந்த இவர் ஆரம்பகாலம் முதலே காங்கிரஸ் கட்சியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்.

கடலூர் ஜில்லா போர்ட் தலைவராக இரண்டு முறை இருந்தவர். 

1951ல் தமிழக காங்கிரஸ் கட்சியில் அவர் சார்ந்த வன்னியர் சமூகத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார் என்று, காங்கிரஸ் விட்டு விலகி செங்கல்பட்டு மாவட்டத்தில் செல்வாக்கு நிறைந்த மாணிக்கவேலு நாயகர் அவர்களோடு இணைந்து உழைப்பாளர் கட்சி என்ற கட்சியை நிறுவி 1952ல் தனித்து களம்கண்டார். 

இதில் 16 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் 3நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த கட்சி பெற்றது. 

பிறகு காமராசர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். மேலும் திண்டிவனம் தொகுதில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்தெடுக்கப்பட்டு பணியாற்றினார் 

இவை அவரது அரசியல் வாழ்க்கையின் ஒருபுறம் இருக்க, கடலூர் ரயில் நிலையம் மற்றும் மருத்துவமனைக்கு தன் இடத்தை தானமாக அரசுக்கு கொடுத்தவர்.

சமீபத்தில் தமிழக அரசு இவர் உருவப்படத்தை சட்டப்பேரவையிலும் திறந்ததும், கடலூரில் மணிமண்டபமும் கட்டி பெருமை படுத்தியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Freedom fighter ramasamy padayatchiyar 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->