சுதந்திர போராட்ட வீரர், நேதாஜியின் மீது பற்று கொண்ட பெரம்பலூர் ரங்கசாமி இயற்கையை எய்தினார்.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் வட்டம் வரகுபாடி கிராமத்தைச் சார்ந்தவர் ரங்கசாமி. இவரது வயது 93. சுதந்திர போராட்ட தியாகியான ரங்கசாமி, தனது இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராக இருந்து வந்துள்ளார். 

இதனால் வெள்ளையருக்கு எதிராக பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். இதன் பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய ராணுவத்தில் இணைந்து செயல்பட்டுள்ளார். பர்மாவில் இருக்கும் இராணுவ மையத்திற்கு சென்று ராணுவ பயிற்சி மேற்கொண்ட நிலையில், கடந்த 1931 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் வருடம் வரை உலக போரில் நாட்டிற்காக பணியாற்றியுள்ளார். 

ஒவ்வொரு வருடத்திலும் சுதந்திர தினத்தன்றும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளன்றும் தவறாமல் தேசியக் கொடியை ஏற்றி வீரவணக்கம் செலுத்துவது ரங்கசாமியின் வழக்கம். ரங்கசாமியின் மனைவி கடந்த பத்து வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சாலையில் தனது மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். 

தற்போது முதுமையின் காரணமாக ரங்கசாமி உயிரிழந்துள்ளார். இவரது இறப்பு குறித்த தகவலை அறிந்த அம்மாவட்ட ஆட்சியர், தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினார். மேலும், அரசு அதிகாரிகளும், தன்னார்வலர்களும், அப்பகுதி பொதுமக்களும் ரங்கசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Freedom Fighter Perambalur Rangasamy Passed Away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->