மகளிர் தின ஸ்பெஷல்: இலவச பெட்ரோல்.! பங்க்குக்கு வண்டிய விடு குமாரு..! - Seithipunal
Seithipunal


வரும் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினம் வருகின்றது. இந்த சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி கோயம்புத்தூரில் இருக்கும் ஹெச்பி பெட்ரோல் பங்க் மகளிருக்கு இலவச பெட்ரோல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

கோவையில் இருக்கும் எச்.பி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் எட்டாம் தேதி மட்டும் முதலில் வரும் 100 பெண்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கின்றது. 

மேலும், பெண்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, "பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியானது, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ல் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.

 

வருங்காலத்தில் அனைத்து பெண்களும் தங்களுடைய எண்ணங்களை செயல்பாடுகளாக மாற்ற எங்களுடைய நிறுவனம் உதவி புரியும்." என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free petrol for ladies in kovai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->