விலையில்லா ஆடு எப்படி வழங்கப்படுகிறது..? சதியை அம்பலப்படுத்திய மாற்றுத்திறனாளி - அதிமுக அரசின் குட்டு அம்பலம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் புதுப்பாளையம் ஒன்றியத்திலுள்ளது கீழ்படூர் கிராமம்.

இந்த கிராமத்தில் காந்தி மனைவி திலகம் என்ற மாற்றுத் திறனாளி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தமிழக அரசின் விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்க திட்டமிடப்பட்டது.

இதற்காக ஆடுகள் வழங்கக் கோரி 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மனு கொடுத்திருந்தனர். அதில் மாற்றுத்திறனாளி திலகமும் மனுதாரராக இருந்தார்.

இதையடுத்து 31 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். தகுதியற்ற நபர்களுக்கு முறைகேடாக பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளி திலகம் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

அரசு வழங்கும் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையிலும், மாற்றுத்திறனாளிகள் விலையில்லா ஆடுகள் பெறும் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கால்நடைத் துறை அலுவலக வளாகத்தில் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்படூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளி திலகம் என்பவருக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர் களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கால் நடைத்துறை இணை இயக்குனர், கிராமத்தில் உரிய விசாரணை செய்து அதனடிப்படையில் மாற்றுத்திறனாளி திலகத்திற்கு அரசின் விலையில்லா ஆடுகள் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free goat from tamilnadu government


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->