கனமழை காரணமாக 4 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் பலி.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை  தீவிரம் அடைந்துள்ளது, எனவே, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக கோவை போன்ற மேற்கு மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. Related image

கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது, இதனால் ஒருசில குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும் மழை வலுக்கும் என்ற தகவலால் பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. 

இந்தநிலையில், கோவை மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் நான்கு வீடுகளில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது 10 பேர் உயிரிழப்பு. இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாக நான்கு வீடுகளின் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பனி தீவீரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four houses collapsed and 9 people killed


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->