வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 143 பயணிகள் செய்த காரியம்.! உண்டான பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


கொரோனா  வைரஸ் பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு சில உத்தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் 22ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு எந்தவிதமான சர்வதேச விமானமும் இந்தியாவில் தரையிறங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

அதேபோல மாநில அரசுகளுக்கு 65 வயதிற்கு மேற்பட்ட மனிதர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்களை தவிர்த்து யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. அதேபோல 10 வயதிற்கு குறைவான குழந்தைகளை யாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. 

மாணவர்கள், நோயாளர்கள் தவிர்த்து ரயில் மற்றும் விமான போக்குவரத்தை அனைத்தையும் ஒத்திவைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல மாநில அரசுகள் தனியார் நிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு உத்தரவிடுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், துபாயில் இருந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்ட 143 பயணிகள் கொரோனா முகாம்களுக்கு செல்ல மறுப்பு தெவித்துள்ளனர். இதற்கு காரணமாக காலை 7 மணியில் இருந்து உணவு, தண்ணீர் என எதுவும் வழங்கவில்லை என்று ஆவேசம் தெரிவித்து அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் சுகாதார துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

foreign passengers fight with police in madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->