தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. உணவுத்துறை அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியவசிய பொருட்கள் சரியான அளவில் தரமாக கிடைப்பதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்கள், உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் மாதந்தோறும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதிகாரிகள் ஆய்வில் ஈடுபடும்போது,  மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நியாயவிலை கடைகளில் தகவல் பலகையில் கடையின் பெயர், பணி நேரம், ஊழியர் பெயர் ஆகியவற்றுடன் அத்தியவசிய பொருட்களின் இருப்பு,  விலை, வினியோகம் பற்றி விவரங்கள் எழுதப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 

உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகள் ரேஷன் கடையில் ஆய்வு செய்யும்போது, தரம் குறைவான பொருட்கள் இருந்தால் அவற்றை உடனே கிடங்குகளுக்கு அனுப்பி தரமான பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருட்கள் இடுப்பை சரி செய்து இருப்பு குறைவு அதிகம் இருந்தால் ஊழியர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்கு ஆய்வு  செய்ய செல்லும் முன்பு அந்த கடையில் அட்டைதாரர்கள் இணைக்கப்பட்ட தெருவிற்கு சென்று, குறைந்தது 10 அட்டைதாரர்களை சந்தித்து அவர்களிடம் கடையில் செயல்பாடுகள் குறித்து கருத்து கேட்க வேண்டும். அந்த அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்களின் அளவு ஆகியவற்றைக் குறித்து வந்து, கடையில் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, போலி பட்டியல் போடப்பட்டு இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

food distribution department new order


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->