ஜொலிக்கும் ஸ்டார் ஹோட்டலில், பறக்கும் பரோட்டா போட்டு அசத்திய மாஸ்டர்களின் இன்றைய நிலை.. கொரோனா கொடூரங்கள்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் ஊரடங்கு பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் பணியாற்றி வந்த பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். மேலும், சொந்த நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தவர்களும், தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். 

சீனா போன்ற நாடுகளில் மாதத்திற்கு இலட்சக்கணக்கில் சம்பாத்தியம் செய்து வந்த பலரும், சொந்த ஊர்களில் வேலையில்லாமல் முடங்கியும், பலர் மிகக்குறைந்த பட்ச வருமானத்திற்கும் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூரில் இருந்து சீனாவிற்கு சென்று பரோட்டா (Fly Parotta) மாஸ்டர்களாக பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்கள் கொரோனாவின் தாக்கத்தால் வேறு வழியின்றி சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். 

மேலும், இவ்வாறு மொத்தமாக புலியூர் பகுதியில் இருந்து சீனாவிற்கு சென்று பணியாற்றி வந்த 400 க்கும் மேற்பட்ட மாஸ்டர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ஒரு மாஸ்டர் தெரிவிக்கையில், நான் சீனவிரல் மாதத்திற்கு ரூ.1 இலட்சம் இந்திய மதிப்பில் சம்பாரித்து வந்தேன். இப்போது ரூ.4000 ஆட்டோ இயக்கி சம்பாரித்து வருகிறேன் என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fly Parotta masters work in native like auto driver due to lockdown


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->