கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் திறப்பு: சீர்காழி அருகே போக்குவரத்து துண்டிப்பு! - Seithipunal
Seithipunal


சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் நான்காவது முறையாக வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளதால், முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, வெள்ளைமணல், கோரைதிட்டு,  உள்ளிட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், அங்கிருந்து வெள்ள நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவு எட்டியதால் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் நீரானது, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாரு அருகே கடலில் கலக்கிறது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே செல்வதால், முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, வெள்ளைமணல், கோரைதிட்டு,  உள்ளிட்ட கிராமங்களில் சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood water opening kollidam river traffic cut near sirkazhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->