30 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய மீனவர்கள்..! கண்ணீர் மல்க வரவேற்ற குடும்பம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அரபிக் கடலின் ஆழ்கடல் பகுதிகளில் உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களில் 45 மீனவர்கள் கடந்த மாதம் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றார்கள், அப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் கியார் புயல் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அந்த நேரத்தில், வீடு திரும்ப இயலாத மீனவர்கள் ஆங்காங்கே கரை இருக்கும் திசையில் ஒதுங்கினர். பின்னர், சில மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினார்கள். ஆனால், 10 மீனவர்கள் வீடு திரும்பாததால் அவர்களின் உறவினர்கள் அச்சத்தில் இருந்தார்கள்.

இதை தொடந்து, நேற்று மாலை கன்னியாகுமரியை அடைந்த 10 அந்த மீனவர்களை அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். இது குறித்துப் பேசிய மீனவர்கள், கியார் புயலால் லட்சத் தீவு அருகே கல்பனி தீவில் கரை ஒதுங்கியதாகவும், அந்த புயலால் அவர்களின் படகுகள் சேதமடைந்ததாகவும் கூறினர். 

அதனால், வாடகைக்குப் படகு எடுத்து கன்னியாகுமரி வந்து கொண்டிருக்கையில் அந்த படகு 130 மயில் தூரத்தில் நீரில் மூழ்கிவிட்டதாகவும் அந்த படகின் விலை சுமார் 60 லட்சம் ரூபாய் என்றும் தெரிவித்துள்ளனர். 

அரபிக் கடலில் ஏற்பட்ட புயலால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fisher man back to house after 30 days


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->