மீன் குழம்பை புசித்து சாப்பிட்ட திருட்டு புள்ளிங்கோ.. விட்டத்தை பார்த்து உறங்கியபோது வெளுத்தெடுத்த மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பரைக்கோடு பகுதியை சார்ந்த 40 வயது நபர், நாகர்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் கார் பழுது பார்க்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் இருக்கும் சமையலறை கதவினை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்துளளனர். கணவன் - மனைவி இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில், கொள்ளையர்கள் வீட்டில் பணம் மற்றும் நகை இருக்கிறதா? என்று தேடி பார்த்துள்ளனர். 

வீட்டில் பணம் மற்றும் நகைகள் ஏதும் கிடைக்காத நிலையில், இதனை தேடிய களைப்பில் பசி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சமயலறைக்குள் பாத்திரத்தில் கமகமக்க சுவையான மீன் குழம்பு இருந்துள்ளது. பக்கத்திலேயே சாதமும் இருக்கவே, கொள்ளையர்கள் விருந்து சாப்பாடு போல மீன் குழம்பை மொட்டை மாடிக்கு எடுத்து சென்று சாப்பிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.  

காலையில் எழுந்து பார்த்த தம்பதிகள், சமையலறை கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் வீட்டில் பணம் நகை ஏதும் திருடப்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து சமயலறைக்குள் சென்று பார்க்கையில், பாத்திரம் காணவில்லை. இதன் பின்னரே  திருடர்கள் மீன் குழம்பை சாப்பிட்டு சென்றது தெரியவந்துள்ளது. மேலும், இதனைப்போன்று மற்றொரு வீட்டில் திருட முயற்சித்து, அது தோல்வியில் முடிந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், வழக்கம்போல கொள்ளையன் திருட சென்ற வீட்டிற்குள் வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு, வீட்டின் மொட்டை மாடியில் அயர்ந்து உறங்கியுள்ளான். வீட்டின் மாடிக்கு தற்செயலாக சென்ற உரிமையாளர் கொள்ளையன் உறங்கிக்கொண்டு இருப்பதை கண்டுள்ளார். 

இதனையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கொள்ளையனை பிடித்து, நையப்புடைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கொள்ளையனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையில், வீட்டிற்கு திருட செல்வதும், திருட பொருட்கள் இல்லாத பட்சத்தில் சாப்பிட்டு வருவதை வழக்கமாக வைத்த கொள்ளையன் என்பது அம்பலமாகியுள்ளது.

இவன் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் நெடுவன்காடு பகுதியை சார்ந்த சதீஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கன்னியாகுமரி பகுதியில் இது போன்ற மீன் குழம்பு திருட்டு சம்பங்களில் அதிகளவு ஈடுபட்டதும், பல வீடுகளில் பணம் மற்றும் நகைகளை திருடி கைவரிசை காண்பித்தும் தெரியவந்துள்ளது. மீன் குழம்பு சாப்பிட்டு திருடி வந்த கொள்ளையன், சிறையில் களியை திண்ணவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fish Kulampu eating thief arrest by Kanyakumari police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->