#Breaking : விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினிவேன் வெடித்து சிதறியது! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினிவேன் வெடித்து சிதறியது. பட்டாசு ஏற்றி கொண்டு வடவானுர் கிராமம் அருகே வந்தபோது திடீரென வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது.

மினிவேன் திடீரென தீ பற்றி எரிந்தது, தீயை அணைக்க முயன்ற பொதுமக்கள், பட்டாசு வேன் என்றதால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பட்டாசு வேன் தீப்பிடித்து வெடித்ததில், 2 பேர் உடல் சிதறி பலியானார்கள். 10-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

firework van fire accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->