பொள்ளாச்சி விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம் - ஸ்டாலின் மருமகன் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை..? - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான பொள்ளாச்சி ஜெயராமனின் இரு மகன்களும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக வதந்தி பரவி வருகிறது.

இந்த விவகாரத்தில் தனக்கும் தன் மகன்களுக்கும் தொடர்பில்லை என பொள்ளாச்சி ஜெயராமன் திட்டவட்டமாக மறுத்த போதிலும், இது தொடர்பாக சமூகவலைதளங்களில் பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த பாலியல் சம்பவம் தொடர்பாக திமுக ஆதரவு இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தூண்டுதலால் தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பதிவு செய்யப்படுவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சபரீசன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சபரீசன் தரப்பில் இருந்து வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில் சபரீசன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்துள்ளதாகவும், அவரது குற்றச்சாட்டால் சபரீசன் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதாக சபரீசனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

English Summary

fir-against-stalin-son-in-law-sabareesan


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal