எங்களை இப்படி பண்ணாதீங்க..! பரிதவிப்பில்.. குடிமகன்கள் கூறிய வார்த்தைகள்.!  - Seithipunal
Seithipunal


ஈரோடு அருகே இருக்கும் டாஸ்மாக் கடையில் குடிமகன்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழக அரசு தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி உத்தரவு வெளியிட்டு இருந்தது. 

அதன்படி குவார்ட்டர் ஒன்றுக்கு ரூ.10, ஆஃப் ஒன்றுக்கு ரூ.20 மற்றும் ஃபுல் ஒன்றுக்கு ரூ.40 என்று விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. மேலும் பீர் ஒன்றுக்கு விலை ரூ.10 உயர்த்தப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தில் பல குடிமகன்களுக்கு இன்னும் விலை உயர்வு குறித்து தெரியவில்லை. இதன் காரணமாக டாஸ்மாக் கடையில் முந்தைய விலைக்கு பணத்தை கொடுத்து கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட துவங்கி இருக்கின்றனர். 

பொதுவாகவே, மாலை வேளைகளில் டாஸ்மாக் கடைகள்,அமளிதுமளியாக காட்சியளிக்கும். தற்பொழுது காய்கறி சந்தை போல ஒரே கூச்சலாக காணப்படுகின்றது. இந்நிலையில், மதுபான விலை உயர்வு குறித்து அறியாத ஈரோடு அருகே டாஸ்மாக் கடையில் குடிமகன்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது, :அரசுக்கு எங்களால்தான் வருமானம் கிடைக்கின்றது. ஆனால், அடிக்கடி அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தி தங்களை சோதிக்கின்றது." என்று கவலை தெரிவித்துள்ளனர். அவர்களை சமாளிக்க முடியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் திணறி வருகின்றனராம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fight in erode tasmac


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->