சாமி கும்பிட போன இடத்தில செய்யிற வேலையா இது.? அத்திவரதர் தரிசனத்தில் நடந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அனந்தஸரஸ் என்ற தீர்த்தத்தினுள் அத்திவரதர், அனந்த சயனராக ஆனந்த யோகம் கொண்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அத்திவரதர் அந்தத் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் தருகிறார். இந்த கணக்குப்படி அடுத்த தரிசனம் இந்த ஆண்டு நமக்கு கிடைத்துள்ளது. அப்போது 48 நாட்கள் மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிறகு மறுபடியும் நீருக்குள் சயனம் கொள்ள ஆரம்பித்துவிடுவார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் வெளியே எழுந்தருளும் அத்திவரதர், 1979ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி எழுந்தருளினார். அதன்பின் அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. குளத்திற்குள் துயில் கொண்டிருந்த ஆதி அத்திவரதர், கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு பரிகார பூஜைகளுடன் வெளியே எடுக்கப்பட்டார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டுள்ளார். இந்த விழா ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 17ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வரும் நிலையில், அத்திவரதர் தரிசனத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கிய பக்தர்களுக்கு மூச்சுத் திணறல் ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் அத்திவரதரை தரிசனம் சென்ற இடத்தில், பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக ஒருவரை ஒருவர் முட்டி மோதி கொண்டதில், பிரச்னை ஏற்பட்டு இந்த சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fight in athivarathar temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->