திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் அடிதடி, கும்மாங்குத்து!. வேட்டியை உருவி ஜட்டியோடு நிற்கவைத்த அ.தி.மு.க-வினர்!. - Seithipunal
Seithipunal


தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர், நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை செல்ல திட்டமிட்டிருந்தார். இந்தநிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்க கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கார்களில் திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

இந்தநிலையில், திருச்சி விமான நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் இரு கோஷ்டியினர் மோதலில் ஏற்பட்டது. அங்கு முன்னாள் இலுப்பூர் பேரூராட்சி தலைவரை உதைத்து வேட்டியை உருவியதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

திருச்சி ஏர்போர்ட்டில்அமைச்சர் விஜயபாஸ்கர்முன்னிலையில் அடிதடி, கும்மாங்குத்து, வேட்டி உருவல் போன்றவை நடைபெற்று ஜட்டியோடு அரை மணிநேரம் நின்றார் இலுப்பூர் முன்னாள் யூனியன் சேர்மன் ராஜமன்னார்.

திருச்சி ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்க இலுப்பூர் முன்னாள் சேர்மன் குரு ராஜமன்னார், மற்றும் அதிமுக ஒன்றிய பொருளாளர் கருப்பையா மற்றும் பலரும் சென்றிருந்தனர். 

இந்த நிலையில் ராஜமன்னார் கருப்பையாவை பற்றி அமைச்சரிடம் தவறுதலாக பேசியிருக்கிறாராம். இது கருப்பையா கவனத்திற்கு சென்று,  இது தான் சரியான நேரம் என்று இலுப்பூர் ராஜமன்னாரிடம் விமான நிலையத்தில் நியாயம் கேட்க, இருவருக்கும் கை கலப்பாகி அடிதடி வரை போய் ராஜமன்னாரின் வேட்டியை உருவி அரை மணி நேரம் பதறவைத்துள்ளனர்.

 இந்த ராஜமன்னார் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி பல இடங்களில் திருட்டு மணல் எடுத்து வருகிறாருகிறாராம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பிற்பகல் 2 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்து, ஆதரவாளர்களிடம் கைகுலுக்கிய பிறகு  காரில் ஏறி புதுக்கோட்டை புறப்பட்டு சென்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fight ADMK parties


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->