பகிர்மான கால்வாய்கள் மணல்மேடாக காட்சியளிப்பதால் விவசாயிகள் கவலை..! - Seithipunal
Seithipunal


திருமூர்த்தி அணையின் பகிர்மான கால்வாயை தூற்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம் புதுப்பாளையம் கிளை கால்வாய் மூலம் சுமார் 6ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இவற்றின் பகிர்மான கால்வாய் மற்றும் கிளை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி சார்பில் திருப்பூர் கலெக்டருக்கு மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் பி.ஏ.பி., பிரதான கால்வாயில் பூசாரிபட்டி ஷட்டரில் இருந்து பிரியும் புதுப்பாளையம் கிளை கால்வாயில் புதர்கள் மண்டி காணப்படுகிறது. 

இதனால் நீர்வரத்து அதிகமாக வரும் பட்சத்தில் அவை கடைமடைபகுதிகளை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பகிர்மான கால்வாய்கள் தூற்வாரபடாமல் இருப்பதால் அவற்றை உடனே தூற்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பணிகளை தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடத்த சம்மந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmers Worried About distribution cannels


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->