விவசாய நிலங்கள் சரிவர பட்டா மாறுதல் நடைபெற்றதால் விவசாயிகள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல்.!! - Seithipunal
Seithipunal


விவசாய நிலங்களை பட்டா சரிவர பதிவு  செய்ய படவில்லை. கணினியில் பட்டா பதிவு செய்யும் பணியாளர்கள் செய்த தவறுகளால் ஆண்டுக்கு 6000 பெரும் விவசாயிகள் சுமார் 75 சதவீதம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

குறு விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகள் நலனுக்காக பிரதமர் விவசாயி ஆதரவு நிதி என்ற திட்டம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. மீண்டும் பா.ஜ.க நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றிபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான ரூ.6 ஆயிரம் வழங்கும் நிதியுதவித் திட்டத்தை தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டில் உள்ள சுமார் 15 கோடி  விவசாயிகள் பயன்பெறுவார்கள் 

 

இந்த திட்டத்தின் மூலம் நிதி உதவி பெரும் விவசாயிகள் பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். மற்றும் குடும்ப அட்டை ஆகியவையும் இருக்க வேண்டும்.  கணினியில் பட்டா பதிவு செய்யும் பணியாளர்கள் செய்த தவறுகளால் ஆண்டுக்கு 6000 பெரும் விவசாயிகள் சுமார் 75 சதவீதம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

 

இது பற்றி காவிரி பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவரும், முன்னாள் கிராம அதிகாரியுமான (முன்சீப்) மகாதானபுரம் வி.ராஜாராம் கூறியதாவது 1924-ம் ஆண்டுதான் தமிழ்நாட்டில் முதன்முதலில் நில மேம்பாட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது நில உரிமையாளர் யார்,  கோயில் நிலம் எவை  என்று பிரிக்கப்பட்டது. அந்த கால கடத்தில் தான் சிட்டா மற்றும் அடங்கல் போடப்பட்டது. சிட்டா என்பது விவசாய  நிலத்தின் உரிமையாளரைக் குறிக்கும். அடங்கல் என்பது விவசாய நிலத்தில் என்ன பயிர் சாகுபடி செய்யப்படுகிறது என்பதைக் குறிக்கும்.

 

விவசாயிகள் நில உரிமையாளர்கள் பிரச்னைகள் மற்றும் குழப்பத்தின் காரணமாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டது,இதனால் 1983-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நில ஆவணங்களை மேம்படுத்துவதற்காக  அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அப்போது சிறப்பு வட்டாட்சியர்களை நியமித்து, அரசு அதிகாரிகள் கிராமந்தோறும் சென்று விவசாய நில உரிமையாளர்கள் ஆவணங்களோடு சரிபார்த்தனர். அனால் அப்போது வட்டாட்சியர்கள் முழுமையாக ஆவணங்கள் முறைப்படுத்தப்படவில்லை.


ஆவணங்களை கணினியில் பதிவு செய்த தற்காலிகப் பணியாளர்களாலும் நில உரிமையாளர் தொடர்பான தகவல் சேகரிப்பில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் முழுமையாக அப்பணியைச் செய்யவில்லை. இதனால் குளறுபடிகள் நடந்துள்ளன. 1983-ம் ஆண்டுக்கும் 2019-ம்ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நில ஆவணங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டது. நில ஆவணங்களை சரிபார்க்கும் பணியின்போது விவசாயிகளின் அறியாமையால்  பட்டா மாறுதல் சரியாக செய்யப்படவில்லை. இதனால் பல விவசாய நிலங்கள் விற்றவர் பெயரிலேயே உள்ளது 

ராஜராம் கூறியதாவது அந்த கால கடத்தில் நிலங்களின்  பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒவ்வொரு கிராமத்திலும் சாதிக்கு ஒருவர் மற்றும் அனுபவமுள்ள  5 பெரியவர்களை வட்டாட்சியாளர்களாக நியமித்தனர். அவர்கள் உறுதியளிக்கும் நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்து தரப்பட்டது. இப்போதும் அதுபோல செய்யலாம். இல்லாவிடில், ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து, தாலுகா அளவில் முகாம்கள் அமைத்து வீடு மற்றும் நிலங்களை விற்கும்போது மின்சார பயனீட்டாளர் பெயரை பத்திரத்தின் மூலம் மாற்றித் தருவது போல, பத்திரங்களில் எழுதி வாங்கிக்கொண்டு பட்டா மாறுதல் செய்து கொடுக்கலாம் என்றும். இதற்கு விரைவில் தீர்வு கிடைக்க விட்டால் பல நில உரிமையாளர்கள் பதிப்படைவார்கள் என்று கூறினார் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmers getting to scalar ship from central govt now issues


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->