தொழிற்சாலைகளால் பாதிக்கப்படும் விவசாயிகள்!! நொய்யல் வட்டாரத்தில் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


வெற்றிலை விவசாயத்திற்கு புகழ் பெற்ற ஊர் நொய்யல் வட்டாரத்தில் உள்ள புகளூர். மேலும் காவேரி ஆற்றில் இருந்து பிரியும் புகளூர் வாய்க்கால், பள்ள வாய்க்கால், பாப்புலர் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால், நெரூர் வாய்க்கால் ஆகிய வாய்க்கால் மூலம் நீர்ப்பாசனம் நடக்கிறது.

அங்கு விளையும் வெற்றிலைகள் உள்ளூர் வெற்றிலை மண்டிகளுக்கும், நாமக்கல் மாவட்டம், வேலூர் தினசரி சந்தைகளுக்கும் எடுத்து செல்லப்படுகிறது. மேலும் ஏல முறையிலும் வெற்றிலைகள் வாங்கப்பட்டு தமிழகம் மற்றும் வட இந்தியாவிற்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. 

நொய்யல் ஆறு மற்றும் காவேரி நீரில் சாயக்கழிவுநீரும், தொழிற்சாலையின் கழிவுகளும் கலந்து வருகின்றன. இந்நீரை பாய்ச்சியதால், புகளூர் மற்றும் நொய்யல் வட்டாரத்தின் மண்வளம் குறைந்தது மட்டும் இல்லாமல் நீரும் மாசடைந்து, மேலும் வெற்றிலை கொடிகளில் கணு அழுகல், இலைப்புள்ளிகள், வாடல்நோய்  போன்ற நோய்கள் தாக்கப்பட்டது. 

இதனால் வெற்றிலை விவசாயிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். இக்காரணத்தால் வெற்றிலை கொடிக்கால்களில் வெற்றிலை உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

இந்நிலையில் புகளூர் வேளாண்துறை அதிகாரி டாக்டர் திரவியம், கரூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ராஜவேலு, துணை இயக்குனர் மோகன்ராம்,திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி பேராசிரியர் சங்கீதா, நபார்டு வங்கி பரமேஸ்வரன் அகியோர்க் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர். 

மேலும் புகளூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க செயலாளர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் ஆகியோரை சந்தித்து பூச்சி மற்றும் நோய் பாதுகாப்பு பற்றி கேட்டு அறிந்தனர். அதன் பின்னர் அவர்கள் வெற்றிலை தாக்கும் நோய் பற்றி தகவல்களை தெரிந்து கொண்டதால், அதை போக்குவதற்காகவும், அதற்க்கு உண்டான உதவியையும் செய்வதாக கூறினார். 

மேலும் பாதிக்கப்பட்ட வெற்றிலை கொடிக்கல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தது மட்டும் இல்லாமல் வெற்றிலைகள், மாணவர்கள், நீர் ஆகியவற்றின் மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு எடுத்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmers affected by corporate in noyyal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->