அதிர்ச்சி தரும் காரணத்தோடு டவரில் ஏறி தூக்கு கயிறு போட்ட விவசாயி.!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் இருக்கும் சலவடை என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனுக்கு, சொந்தமாக விவசாய நிலம் இருந்துள்ளது. அதில் பவர் கிரிட் நிறுவனம் விவசாயின் ஒப்புதலைப் பெற்று அதில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைத்து இருக்கின்றனர். நிலத்திற்கு இழப்பீடு 10 லட்சம் மற்றும் அவர் நிலத்தில் செல்லும் மின் வயர்களுக்காக கூடுதலாக பணம் தருவதாக உறுதி அளித்து நிலத்தில் டவர் அமைத்துள்ளனர்.

ஆனால், ஐந்து லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு டவர் அமைத்துள்ளனர். மீதி பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர். மேலும், கூடுதலாக பேசிய பணத்தையும் தருவதாக இல்லை. அந்த டவரின் கட்டிட பணி இன்னும் நிறைவடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி மீதமுள்ள பணத்தை கேட்டு பலமுறை நிறுவன அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், அவர்கள் கிருஷ்ணனுக்கு சரிவர பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி ,அந்த டவரில் ஏறி தூக்குக் கயிறோடு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதன் காரணமாக பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கும், டவர் அமைத்த அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல் துறையும், அதிகாரிகளும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பணத்தை திருப்பித் தருவதாக கூறி விவசாயியை கீழே இறங்குமாறு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmer trying suicide for money


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->