மோடியை விமர்சித்து கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த புகைப்படம்.குறித்து வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மாமல்லபுரம் கடற்கரையை இந்திய பிரதமர் மோடி சுத்தம் செய்ததை விமர்சித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார்/ அந்த புகைப்படம் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

சென்ற வாரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சீன அதிபருடனான இந்த சந்திப்பை ஒட்டி கோவளத்தில் தங்கிய பிரதமர் மோடி அதிகாலை அளவில் மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அங்கு கடற்கரையில் போடப்பட்டிருந்த குப்பைகளை மோடி தனது கைகளால் அகற்றி சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் மோடி சுத்தம் செய்யும் போது சூட்டிங் நடைபெற்றது போன்று கேமராக்கள், கேமரா மேன்கள் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் செய்திருந்தார்.

வைலரான அந்த புகைப்படத்தை பலர் ரீடிவீட் செய்ததால் அதன் உண்மைநிலை குறித்து அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த புகைப்படம் போலி என்றும், அது 14 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fake photo by karthik chidambaram about modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->