டிவிஎஸ் பயனாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! கடைசியில் இங்கையும் கைய வச்சுட்டாங்கலா..! - Seithipunal
Seithipunal


டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பெயரில் போலியான மோட்டார் வாகன உதிரி பாகங்கள் சென்னையில் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து அறிவுச் சொத்துரிமை அமலாக்க பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து சென்னை மாநகர காவல் துறையினர் அம்பத்தூர் மன்னூர் பேட்டை நேரு நகரில் உள்ள ஒரு பேக்கிங் யூனிட்டில் திடீரென சோதனை நடத்தினர்.

இங்கு செய்து முடிக்கப்பட்ட முடிக்கப்படாத டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட வாகன உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

https://img.seithipunal.com/large/large_tvsathbar-18225.jpg

இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இதையடுத்து போலியாக உதிரிபாகங்களை தயாரித்தவர்கள் மீது காப்புரிமை மற்றும் போலியான பொருட்கள் தடுப்புச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் போலியான தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்கி ஏமாறவேண்டாம் என்றும,  நிறுவனத்தின் 4 ஆயிரம் டச் பயின்ட் மையங்களில் நிறுவனத்தின் உண்மையான உதிரிபாகங்களை வாங்கிப்பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fake parts identified in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->