பணத்தை கொடுத்தவுடன் சிட்டாக பறந்த புள்ளிங்கோஸ்.. அதிர்ச்சியான மளிகைக்கடை..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் பெருந்துறை அருகே உள்ள செம்மன்குழி மேட்டுப் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவர் பெருமாள் கோவிலுக்கு அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். 

நேற்று மாலை மதுரை மாவட்டத்தைச் சார்ந்த சதீஷ் (வயது 22) மற்றும் அவரது நண்பர் புகழ் (வயது 20) இருவரும் இக்கடைக்கு வந்துள்ளனர். இவர்கள் கடையில் ரூ.50 க்கு மளிகை பொருள் வாங்கிவிட்டு, ரூ.500 வழங்கியுள்ளனர். 

செல்வி மீதமுள்ள பணம் ரூ.450 கொடுத்த நிலையில், மீதி பணத்தை வாங்கிய இருவரும் தங்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று உள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பெண்மணி, அவர்கள் கொடுத்த ரூ.500 யை சோதனை செய்கையில், அது கள்ளநோட்டு என்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தனிப்படை காவல்துறையினர் உடனடியாக வாகன சோதனை சாவடிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இருவரின் வாகன அடையாளத்தை வைத்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். 

இவர்களிடம் இருந்து ரூ.500 நோட்டுகள் 56 கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில், கடந்த 2018 ஆம் வருடமே சதீஷ் திருட்டு வழக்கில் சிக்கி, ஜாமீனில் வந்து தற்போது கள்ளநோட்டு மாற்றி சிக்கிய தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fake money police arrest gang


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->