ஒரு கிட்னி 3 கோடி ரூபாய் - ஈரோடு மக்களை கதி கலக்கிய விளம்பரம் : அதிர்ச்சியில் பிரபல மருத்துவமனை.! - Seithipunal
Seithipunal


தினுசு தினுசா யோசிக்கறாங்களேனு ஆச்சர்யப்படும் அளவிற்கு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது.

அந்த பேஸ்புக் கணக்கின் மூலம் வெளியிட்ட பதிவில் முன்பதிவு செய்து தேவைப்படும் போது மட்டும் கிட்னி கொடுத்தால் 3 கோடி ரூபாய்  தருவதாக விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதை நம்பி பலர் முன் பதிவு செய்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மோசடி போர்வளிகள் முன்பதிவு செய்வதற்கு குறிப்பிட்ட தொகை வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேஸ்புக் கணக்கு தொடர்பாக கேட்டறிந்தார்.

அப்போது நாங்கள் பேஸ்புக் கணக்கு எல்லாம் தொடங்கப்படவில்லையே என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட பெண் சொன்ன பேஸ்புக் கணக்கில் சென்று பார்த்தபோது, தங்களது மருத்துவமனையின்  பெயரிலேயே போலி கணக்கு தொடங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதன்மூலம் பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் கொடுத்தனர். காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fake-FB-account-money-fraud-to-buy-kidney-near-Erode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->