10 ஆம் வகுப்பு கூட படிக்காமல் 19 போலி மருத்துவர்கள்.! வேலூரில் அடுத்தடுத்த பேரதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மூன்றும் சேர்ந்து 35 குழுக்களாகப் பிரிந்து நடத்திய சோதனையில் 19 போலி மருத்துவர்கள் சிக்கியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் முழுவதும், போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. மேலும் மருத்துவர்களிடம் உதவியாளராக இருப்பவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் போன்றோர் தங்களது வீடுகளில் கிளினிக் வைத்தும், தனியாக கிளினிக் நடத்தியும் மருத்துவம் பார்த்து வருவதாகவும் தெரியவருகிறது.

10ஆம் வகுப்பைக் கூட நிறைவு செய்யாத பலர் போலி மருத்துவம் செய்து வருவது, பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதாகவும் குற்றச்சாட்டுகள் வரவே, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மின் ஆகியோரது தலைமையில், மருத்துவர், காவல் உதவி ஆய்வாளர், சார்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய 35 குழுக்கள் அமைக்கப்பட்டது.

அமைக்கப்பட்ட குழுக்கள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக சோதனை கொண்டது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் அந்தக்  குழுக்கள் நடத்திய சோதனையில், திருப்பத்தூரைச் சேர்ந்த குலசேகரன், சத்யநாராயணன், மாது, வெங்கடேசன், அச்சுதன் வாணியம்பாடியைச் சேர்ந்த யுவராஜ், மோகன்ராஜ், சண்முகசுந்தரம், மேல்பட்டியைச் சேர்ந்த குப்புசாமி பரதராமி பகுதியை சேர்ந்த ரமணா, ஸ்ரீநிவாசலு, துரைசாமி , சுரேஷ்குமார், சுமைதாங்கி ஜெயபால், சோளிங்கர் பிரபு பனப்பாக்கம் அருள்தாஸ் ஆகிய 19 போலி மருத்துவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள்.

10க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் தப்பி ஓடி தலைமறைவாக இருக்கிறார்கள், அதனால் அவர்களைத் தேடும் பணி நடக்கப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்களின் கிளினிக்குகளை சீல் வைக்கப்பட்டது.

கிளினிக்குகளில் இருந்த மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து பேசிய மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மின், தொடர்ந்து கண்காணித்து தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும், மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் முழுவதுமாக களையெடுக்கப்படுவார்கள் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

போலி மருத்துவர்களிடம் இருந்து பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அரசின் அங்கீகாரம் பெற்ற மருத்துவர் தானா என்பதை உறுதி செய்த பின்னரே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று யாஸ்மின் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fake doctors in vellore


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->