டாக்டர் எனக் கூறி போலியாக மருத்துவம் பார்த்த இளைஞர்.!   - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் 22 வருடங்களாக தர்ம ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. தனியார் கல்லூரி தான் இருந்தாலும் அரசு உதவி பெற்று இயங்கி வருகிறது. இந்த கல்லுரியில் வென்மணி என்னும் மாணவர் படித்து கொண்டு இருந்தார்.  

மேலும், இங்கு ஆயுர்வேத மருத்துவப்படிப்பு மொத்தமாக 6 ஆண்டுகள் கற்பிக்கப்படும். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த கல்லூரியில் சேர்ந்த வென்மணி, தற்போது 5 ஆம் வருடம் பயின்று வருகிறார். 

மருத்துவப்படிப்பை முடிக்கும் வரை நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்பட கூடாது என்பது தெரிந்த ஒன்று தான். ஆனால், தனது மருத்துவப்படிப்பு முடிய இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் இருக்கும் நிலையில் வென்மணி, தான் மருத்துவர் எனக் கூறி சென்னை, செம்மஞ்சேரியில் மருத்துவம் பார்த்ததாக எழுந்த புகாரின் பேரில், வென்மணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

இதைத்தொடர்ந்து,  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட வென்மணிக்கு நீதிபதி சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இதனால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fake doctor in chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->